விஷால் தமன்னா நடிப்பில் 'ஆக்ஷன்' படத்தை இயக்கிய சுந்தர் சி நடிப்பில் அடுத்ததாக 'இருட்டு' படம் வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தன் அடுத்த படம் குறித்து இயக்குனர், நடிகர் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது....
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SundarC.jpg)
''சங்கமித்ரா'' தான் என் கனவு படம். இந்த படத்திற்காக என் மூன்று வருட உழைப்பை போட்டிருக்கிறேன். சொல்லப்போனால் இந்த படத்தோடு படம் இயக்குவதற்கு குட் பை சொல்லிவிடலாம் என இருக்கிறேன்.
சில காரணங்களால் இப்படம் கைகூடவில்லை. இருந்தும் கூடிய விரைவில் இப்படம் மீண்டும் தொடங்கப்படும். இந்த படத்திற்காக பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றுகூட இருக்கின்றனர். இந்திய சினிமாவே திரும்பிப்பார்க்கும் அளவு இப்படம் இருக்கும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)